புதுச்சேரி: முன்னாள் எம்எல்ஏ மரணம்

525பார்த்தது
புதுச்சேரி: முன்னாள் எம்எல்ஏ மரணம்
புதுச்சேரியின் முதலியார்பேட்டையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் (76) உடல்நலக்குறைவால் நேற்று மாலை சென்னையில் காலமானார். இவர் 1991-1996 வரை அதிமுகவிலும், 2006-2011 வரை திமுகவிலும் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார். தற்போது அமமுகவில் மாநில அமைப்பு செயலாளராக இருந்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று (பிப்ரவரி 17)மாலை முதலியார்பேட்டையில் அடக்கம் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி