புதுச்சேரியில் அரசு கல்லூரிப் பேராசிரியர்கள் தங்கள் பதவி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, இன்று முதல் தாகூர் கலைக்கல்லூரி மற்றும் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மைய வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்களின் வகுப்புகள் பாதிக்காத வகையில் வகுப்புகளை நடத்திவிட்டு, மற்ற நேரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடத்தப்படுகிறது.