புதுச்சேரி: நாளை உயர்நிலை பள்ளி நிலைத் தேர்வு

121பார்த்தது
புதுச்சேரி: நாளை உயர்நிலை பள்ளி நிலைத் தேர்வு
புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத் துறையில் ஒருங்கிணைந்த உயர்நிலைப்பள்ளி நிலைத் தேர்வுக்கான போட்டி எழுத்துத் தேர்வு நாளை 31 ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள 59 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் இந்த தேர்வில் 21,688 பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, கையொப்பமிட்டு கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி