புதுச்சேரி தவளகுப்பத்தைச் சேர்ந்த உதயா, எலி மருந்து சாப்பிட்டு 17.4.2020 அன்று உயிரிழந்தார். அவரது கணவர் ஹரி, உதயாவின் கைப்பேசி உரையாடல்களைப் பார்த்தபோது, உதயாவின் தோழி சுரேகாவின் கணவர் எஸ்ஐ இளஞ்செழியனுடன் அவருக்கு தகாத நட்பு இருந்ததும், இளஞ்செழியன் உதயாவிடம் பணம் மற்றும் நகைப் பறித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஹரி அளித்த புகாரின்பேரில், இளஞ்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இளஞ்செழியன் மற்றும் சுரேகா ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.