புதுச்சேரியிலிருந்து தினமும் இயக்கப்படும் திருப்பதி பயணிகள் ரயிலின் நேரம் ஜனவரி 19 ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்படுகிறது. தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.வினோத் இதுகுறித்து வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தற்போது பிற்பகல் 2.50 மணிக்கு புதுச்சேரியில் புறப்படும் இந்த ரயில், புதிய அட்டவணைப்படி பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும். வில்லியனூர், சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையங்களிலும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.