பெரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் மாநிலம் புதுவை

0பார்த்தது
புதுச்சேரியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களிடையே இருந்த பயம் நீங்கியுள்ளதாகவும், எந்த நோயாக இருந்தாலும் உடனடியாக சரிசெய்யும் அளவிற்கு மருத்துவம் வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். முன்பு பத்து நாட்கள் ஆகும் சிகிச்சை, இப்போது ஓரிரு நாட்களில் இயந்திரங்கள் மூலம் முடிந்து நோயாளிகள் சகஜ நிலைக்கு திரும்புவதாகவும் அவர் கூறினார். புதுச்சேரி ஒரு சிறிய மாநிலமாக இருந்தாலும், பெரிய அளவிலான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.