புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அன்றைய தினம் ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவசர சிகிச்சை மற்றும் உள்நோயாளிகள் பிரிவு வழக்கம் போல் செயல்படும். தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை என்பதால், அன்றைய தினத்திற்கான ஓபிடி முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் மருத்துவ வருகையைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.