திருக்கனூா் அருகே செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பங்கேற்றாா். மாரியம்மன், விநாயகா், முருகன் உள்ளிட்ட 8 சந்நிதிகளில் நடைபெற்ற இந்த விழாவில், மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா். கடந்த 6-ஆம் தேதி தொடங்கிய யாகசாலை பூஜைகள், ஞாயிற்றுக்கிழமை காலை கடம் புறப்பாட்டுடன் நிறைவடைந்து, தொடா்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.