புதுச்சேரி மாநிலம் உறுவையாறு காலனியைச் சேர்ந்த 40 வயது புஷ்பராஜ், தனியார் பெட்ரோல் பங்க் ஊழியர், குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது படிக்கட்டில் தவறி விழுந்து சுயநினைவிழந்துள்ளார். உறவினர்களால் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.