புதுச்சேரி: இணைப்பு பெற ஆய்வு இல்லை

75பார்த்தது
புதுச்சேரி: இணைப்பு பெற ஆய்வு இல்லை
புதுச்சேரி அரசு மின்துறையானது, 100 கிலோவாட் வரை உள்ள புதிய மற்றும் கூடுதல் வீட்டு, வணிக, மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கான நடைமுறையை எளிமையாக்கியுள்ளது. குறிப்பாக, தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்பு விரைவாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை புதுச்சேரி தொழில் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, 100 கிலோவாட் வரை மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இனி ஆய்வு தேவையில்லை. இந்த அறிவிப்பு புதுச்சேரி நுகர்வோர், சிறுகடை மற்றும் தொழில் நடத்துபவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி