புதுச்சேரியில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காரைக்கால் வடக்கு தொகுதியில் உள்ள திருநகர் வாக்குச்சாவடி அருகே விதிகளை மீறி என்.ஆர். காங்கிரசின் சின்னத்துடன் விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து திமுக, காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அந்த பதாகையை உடனடியாக அகற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.