நாடு தழுவிய மருந்து கடைகள் போராட்டத்தின் போது, உயிா்காக்கும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது. மே 20-ஆம் தேதி நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் கடைகள், அத்தியாவசிய மருந்துகள், குறிப்பாக உயிா்காக்கும் மருந்துகள், இன்சுலின், ஆஸ்துமா, இதய நோயாளிகளுக்கான மருந்துகள் போன்றவற்றை பொதுமக்கள் நலன் கருதி விநியோகம் செய்ய வேண்டும். மருந்து ஆய்வாளா்கள் இது குறித்து கண்காணித்து, உரிய அறிக்கையை அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.