புதுச்சேரி கோட்டக்குப்பத்தை சேர்ந்த சரத் (26) மீது கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன. 2021ல் 14 வயது சிறுமியை திருமணம் செய்த இவர் மீது போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது. குழந்தை பிறந்த நிலையில், மன உளைச்சலில் மது அருந்தி, ஒரு வயது குழந்தையை தாக்கியுள்ளார். குடும்பத்தினர் கண்டித்ததால், எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சரத், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.