காரைக்கால் கடலோர காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த ராஜ்குமார், கடற்கரைக்கு வந்த இளைஞர், இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்ததோடு, அப்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ் உத்தரவின் பேரில், முதலில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராஜ்குமார், விசாரணைக்குப் பிறகு நிரந்தரமாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.