புதுச்சேரியில் பொது இடங்களில் மது போதையில் ரகளை செய்து பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் மது போதையில் ஈடுபட்ட செல்வா நகரைச் சேர்ந்த பிரபு, கடலூரைச் சேர்ந்த பாரதி, வானூரைச் சேர்ந்த தமிழழகன், சண்முகபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர், கொடாத்துரை சேர்ந்த முருகன், விழுப்புரத்தைச் சேர்ந்த வைரமுத்து ஆகியோரை கைது செய்தனர்.