புதுச்சேரி பிரிமிர் லீக் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நடைபெற்றது

0பார்த்தது
கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி நடத்தும் 3-வது புதுச்சேரி பிரீமியர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று சி. ஏ. பி மைதானத்தில் நடைபெற்றது. வில்லியனூர் மோகித் கிங்ஸ், ஊசுடு அக்கார்டு வாரியர்ஸ், ரூபி ஒயிட் டவுன் லெஜன்ட், காரைக்கால் நைட்ஸ், மாகி ஸ்ட்ரைக்கர்ஸ், ஏனாம் ராயல்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. மொத்தம் 115 புதிய வீரர்கள் ஏலத்தில் சேர்க்கப்பட்டனர், அனைத்து அணிகளும் தலா 20 வீரர்கள் வரை ஏலம் எடுத்தன. கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி நிறுவனர் தாமோதரன் தலைமையில் இந்த ஏலம் நடைபெற்றது.