புதுச்சேரி மின் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 2024-25ஆம் ஆண்டுக்கான மின் கட்டணம் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத் தலைவர் அலோக் டண்டன், உறுப்பினர் ஜோதிபிரசாத் ஆகியோர் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். அதில் மக்கள் மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.