புதுச்சேரி: சட்டசபை நோக்கி ஊர்வலம் வந்தவர்கள் அதிரடி கைது

83பார்த்தது
புதுச்சேரி: சட்டசபை நோக்கி ஊர்வலம் வந்தவர்கள் அதிரடி கைது
புதுச்சேரியில், நகராட்சி வாரிசுதாரர்கள் 123 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி உள்ளாட்சித் துறை அலுவலகத்திலிருந்து சட்டசபையை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு பணி வழங்க வலியுறுத்தினர். யூகோ வங்கி அருகே போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். தடையை மீறிச் செல்ல முயன்ற 32 பெண்கள் உட்பட 89 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்ட பின், மீண்டும் சட்டசபை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.