புதுச்சேரியில் 102. 4 டிகிரி வெப்பம் பதிவு

315பார்த்தது
புதுச்சேரியில் 102. 4 டிகிரி வெப்பம் பதிவு
புதுவையில் நேற்று (மே 26ம் தேதி) அதிகபட்சமாக 102.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இது நடப்பாண்டின் புதிய உச்சமாகும். இதற்கு முன்னர் கடந்த 21ம் தேதி 102.2 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. நடப்பு கோடை சீசனில் நேற்றுடன் சேர்த்து 6வது முறையாக வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் வெயிலால் மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி