புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இன்று (மே 22), வெப்பநிலை 102.02 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாகவே புதுச்சேரியில் வெயில் சுட்டெரித்து வருகிறது.