திருக்கனூர் அடுத்த செட்டிப்பட்டியைச் சேர்ந்த பல்கலைக்கழக எம்பிஏ இறுதியாண்டு மாணவர் கதிரவன் (25), கடந்த ஜூலை 6, 2024 அன்று வயலுக்குச் சென்றுகொண்டிருந்த 17 வயது சிறுமியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் புதுச்சேரி போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் நீதிபதி சுமதி தீர்ப்பளித்தார். இதில் கதிரவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.