புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்புச் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 18-ஆம் தேதி முதல் பெறப்படும். புதுச்சேரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான சான்றிதழ்களுடன் ஜூன் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என முதல்வர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.