புதுச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோடை காலம் தொடங்கியதிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சில நாட்களாக மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்நிலையில், நேற்று மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. நேற்று 99.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.