புதுச்சேரி: பொன்னியம்மன் ஆலயத்தில் தாலி திருட்டு

0பார்த்தது
புதுச்சேரி: பொன்னியம்மன் ஆலயத்தில் தாலி திருட்டு
புதுச்சேரி ரோடியார் பேட் பகுதியில் உள்ள பொன்னியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு அணிவித்திருந்த ஐம்பொன்னால் ஆன தாலி மற்றும் நெக்லஸ் உள்ளிட்ட சுமார் ₹15 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. பூஜைக்காக ஆலயத்தை திறக்க வந்த அர்ச்சகர் பூட்டு உடைந்து கிடந்ததைக் கண்டு உள்ளே சென்று பார்த்தபோது இந்த திருட்டு சம்பவம் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.