புதுச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள லட்சிய ஜனநாயக கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கான (என்.ஆர்.காங்கிரஸ்) இணைக்க ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜக தலைமைக்கு என்.ஆர்.காங்கிரஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளதாகவும், லட்சிய ஜனநாயக கட்சியை சேர்த்தால் கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவோம் என்றும், அல்லது தமிழகத்தில் உள்ள தவெகவுடன் கூட்டணி வைப்போம் என்றும் எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.