புதுச்சேரியில் வருகிற 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடத்த திட்டமிடப்பட்டிருந்த நடிகர் விஜய்யின் 'மக்கள் சந்திப்பு' என்ற ரோட் ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 2 நாட்களில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய முடியாது என்பதால் இப்போதைக்கு விஜய்யின் மக்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.