புதுச்சேரி, அரும்பார்த்தபுரத்தில் உள்ள ஏ. ஜி. பத்மாவதி தனியார் மருத்துவமனையில் ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை இயந்திரம் இன்று திறக்கப்பட்டது. முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இயந்திரத்தை திறந்து வைத்து இயக்கி வைத்தார். மருத்துவர்கள் அரவிந்தன் காளமேகம் மற்றும் விஜயராகவன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த புதிய இயந்திரம் மூலம் புதுச்சேரியில் அறுவை சிகிச்சையில் ஒரு புதுமை கொண்டுவரப்பட்டுள்ளது.