புதுச்சேரி: சிறுமி பாலியல் வன்கொடுமை.. ரவுடிக்கு 20 ஆண்டுகள் சிறை

402பார்த்தது
புதுச்சேரி: சிறுமி பாலியல் வன்கொடுமை.. ரவுடிக்கு 20 ஆண்டுகள் சிறை
புதுச்சேரியில் 2023 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அருமார்த்தபுரம் பகுதியை சேர்ந்த ரவுடி எழிலரசன் (24) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் லாஸ்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட எழிலரசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க புதுவை அரசுக்கு நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி