புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் மனவெளி பகுதியில் எழுந்தருளியுள்ள செல்வ முத்துமாரியம்மன் தேவஸ்தான திருப்பணிக்கு இந்து அறநிலைத்துறை மூலம் நிதியுதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கோவில் கமிட்டி நிர்வாகிகளிடம் கோவில் திருப்பணிக்காக ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்கள் வழங்கினார். உடன் கோவில் கமிட்டி நிர்வாகிகள் உடனிருந்தனர்.