புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஆத்துவாய்க்கால் பேட் மற்றும் பெரியபேட் அங்கன்வாடி மையங்கள், பொதுப்பணித்துறை மூலம் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் பழுதுபார்க்கும் பணிக்கான துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிவா அவர்கள் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவிப் பொறியாளர் சீனிவாசராம், இளநிலை பொறியாளர் ஸ்ரீராம் சங்கர் மற்றும் திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, அவைத் தலைவர் ஜலால், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், தொமுச தலைவர் அங்காளன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், ஆதிதிராவிடர் அணி தலைவர் பழனிசாமி , ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.