புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்திருந்தது. தொடர் வெப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இருப்பினும், வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளதால், ஏற்கனவே அறிவித்தபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது.