புதுச்சேரியில் இன்று சதமடித்த வெயில்

புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இன்று (ஜூன் 3) புதுச்சேரி பகுதிகளில் 100.76 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.