தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 40-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி புதுக்குப்பத்தில் உள்ள 'தி ஷோர் திரிஷ்வம்' தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குதிரை பேரத்தைத் தவிர்க்கவும், எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சி. வி. சண்முகம் தலைமையில் இந்த எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் தங்கியுள்ளனர்.