புதுச்சேரியில் பிஆர்டிசி மூலம் நகரப்பகுதியில் ஒரு மாதமாக இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்கள் இருப்பதை கண்டித்து தமிழ் உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். மறைமலை அடிகள் சாலையில் உள்ள தாவரவியல் பூங்கா எதிரே மின்பேருந்து பணிமனை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் உரிமை பாதுகாப்பு இயக்கத்தினரை போலீசார் கைது செய்தனர். பேருந்துகளில் உள்ள ஆங்கில பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.