புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள், மாணவர்கள் சரியாக முடி திருத்தம் செய்துள்ளனரா, சீருடை சரியாக அணிந்துள்ளனரா என சோதனை செய்து அனுப்பினர். சரியாக முடி திருத்தம் செய்யாமல் வந்த மாணவர்களை ஆசிரியர் கண்டித்து வெளியேற்றினர். மேலும் தாமதமாக பள்ளிக்கு வந்த மாணவர்களையும் ஆசிரியர்கள் எச்சரித்தனர்.