புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளில், முதல்வர் என். ரங்கசாமி மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், அவர் தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமி, கதிர்காமம் முருகன் கோயில் வளாகத்தில் பேரவைச் செயலர் தயாளனிடம் அளித்தார்.