புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை அலுவலகம் ஒதுக்கப்படாதது குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் சாய். சரவணன்குமார் முதலமைச்சர் ரங்கசாமியைக் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரிகளே ஆட்சி செய்வதாக இருந்தால் சட்டமன்ற தேர்தல் எதற்கு என்றும், அமைச்சரவை அமைத்து இலாக்கா ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், முதலமைச்சர் ஆன்மீகவாதியாக இருந்தால் யாகம் செய்யட்டும், தேசியவாதியாக இருந்தால் மக்களுக்குப் பணியாற்றட்டும் என விமர்சித்துள்ளார்.