புதுவை: மழையில் தானே குடைபிடித்து சென்று மணமக்களை வாழ்த்திய முதல்வர்

84பார்த்தது
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை எந்த நிகழ்ச்சிக்கு பத்திரிக்கை வைத்து அழைத்தாலும் தவறாமல் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். மண்டபத்தில் நேரம் முடிந்து திருமண வீட்டார், பிறந்தநாள் விழா வீட்டார் வீட்டிற்கு சென்று விட்டாலும். இரவு எந்த நேரமாக இருந்தாலும் அவர்களின் வீட்டிற்கு சென்று வாழ்த்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் இரவு கடுமையாக மழை பெய்தது. கொட்டும் மழையிலும் திருமண நிகழ்ச்சியில் தானே குடை பிடித்துக்கொண்டு கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி