சாம்பல் புதனை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் தவகாலம் துவங்கியது

207பார்த்தது
கிறிஸ்துவர்களின் சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது. இதையொட்டி புதுச்சேரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு சாம்பல் பூசும் நிகழ்வுகள் நடைபெற்றது. 40 நாள்களுக்கு கிறிஸ்துவர்கள் நோன்பு இருப்பார்கள். இந்த நாட்களை இறை ஆர்வலர்கள், புனித நாட்களாக கருதுவர். தவக்காலத்தின் இறுதி வாரம் வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்குகிறது. அப்போது சிலுவைப் பாதை எனப்படும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி