புதுச்சேரி: தாலி எடுத்துக்கொடுத்த திருமாவளவன்

82பார்த்தது
புதுச்சேரி வில்லியனூரில் நடைபெற்ற தமிழ்முறை கும்பாபிஷேக விழாவிற்கு வந்த விசிக தலைவர் திருமாவளவன், அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் தங்கினார். அங்கிருந்து கோயில் கும்பாபிஷேகத்திற்கு புறப்பட்டபோது, வாசலில் காத்திருந்த புதிய திருமண ஜோடியான சத்தீஷ்-சுபாவிடம் சென்றார். கடும் கூட்ட நெரிசலுக்கு மத்தியிலும், திருமாவளவன் மணமக்களுக்கு மாலைகளை மாற்றி கொடுத்து, தாலியை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு அனைவரையும் கவர்ந்தது.

தொடர்புடைய செய்தி