திருபுவனை காவல் துறையினர் கொத்தமபுரிநத்தம் ரைஸ் மில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் செல்வம் (76) என்பவரது கடையில் ஆய்வு செய்ததில், குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து, 1.6 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.