புதுச்சேரி-வைத்திகுப்பம் கடற்கரையில் 124-ம் ஆண்டு மாசி மகம் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட உற்சவர்கள் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.