புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அருகே உயர்நிலை நடை மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக, கடலூர்-புதுச்சேரி சாலையில் இன்று (16 ஆம் தேதி) இரவு 8 மணி முதல் நாளை (17 ஆம் தேதி) காலை 8 மணி வரை தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி தெற்கு பிரிவு போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் பக்தவச்சலன் இதுகுறித்து கூறுகையில், புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம், விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கன்னியக்கோயில், முள்ளோடை வழியாக கடலூர் செல்ல வேண்டும் என அறிவித்துள்ளார்.