40 ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்கால் – பேரளம் வழியாக பயணிகள் ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 1898-ல் அமைக்கப்பட்ட இந்த ரயில் பாதையில் 1984 வரை சேவை நடைபெற்ற நிலையில், தற்போது நிரந்தர பயணிகள் சேவை மீண்டும் துவங்கியுள்ளது. காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை நோக்கி இயக்கப்பட்ட முதல் ரயிலுக்கு பொதுமக்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். திருநள்ளாற்றில் புதிய ரயில் நிலையமும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு ஆகிய முக்கிய தர்ம மையங்களை இணைக்கிறது.