புதுவை: தலைப்பாகை கட்டி நூதன போராட்டம்

64பார்த்தது
புதுச்சேரியில் பூர்வீகமாக வசிக்கும் மலக்குறவன், காட்டுநாயக்கர், எருகுலா, குருமன்ஸ் ஆகிய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி கடந்த 44 ஆண்டுகளாக பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்படுவதாக புதுச்சேரி அரசு கூறி வருகிறது. இந்த நிலையில் இன்று அண்ணா சிலை அருகே பழங்குடியினர் தலைப்பாகை கட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார், மலக்குறவன் நல்வாழ்வு சங்க தலைவர் செல்வராஜ், பழங்குடியினர் விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் பிறகும் அரசு நடவடிக்கை எடுக்காமல் வரும் சட்டமன்ற பொது தேர்தலை புறக்கணிப்போம் என பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி