U-15 தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – 2026 போட்டி துவக்கம்

108பார்த்தது
யுனைடெட் புதுச்சேரி அமெச்சூர் ரெஸ்லிங் அசோசியேஷன் சார்பில் U-15 தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – 2026 போட்டி ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த 180 வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். யுனைடெட் புதுச்சேரி அமெச்சூர் ரெஸ்லிங் அசோசியேஷன் நிர்வாகி மற்றும் பொதுச் செயலாளர் கு. வினோத் தலைமையில் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு துணைதலைவர் பிரசூத், தென்னிந்திய மல்யுத்தச் சங்கம் பொதுச் செயலாளர் லோகநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி