புதுச்சேரி காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோட்டுச்சேரி பகுதியில் பாஜக பிரச்சார சுவர் விளம்பரத்தை ஓவியம் வரைந்து தொடங்கி வைத்தார். தாமரை சின்னத்தில் வாக்களிப்பீர், மீண்டும் நல்லாட்சி மலரட்டும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிப்பீர் என்ற வாசகங்கள் இடம்பெற்றன. மத்திய அமைச்சர் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.