காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை வேணுகோபால் எம்பி பங்கேற்பு

212பார்த்தது
புதுச்சேரி மாநிலம் முழுவதும் பாஜக-என். ஆர். காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத போக்கை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை இன்று ராஜீவ்காந்தி சிலையில் இருந்து தொடங்கியது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி மூத்த பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கே. சி. வேணுகோபால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம். எல். ஏ ஆகியோரும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி