புதுவையில் 20 மீட்டருக்கு கடல் நீர் உட்புகுந்ததால் பரபரப்பு

434பார்த்தது
புதுச்சேரி சின்ன காலாப்பட்டு குப்பம் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் 20 மீட்டர் தூரம் கடல் நீர் உட்புகுந்துள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் படகுகள், வலைகள் அடித்துச் செல்லப்பட்டு ஒரு கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டது. அரசு தரப்பில் இதுவரை நிவாரணம் வழங்கப்படாத நிலையில், அடுத்த பாதிப்பு ஏற்படக்கூடும் என மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி