புதுச்சேரியில் தனியாா் படகில் பயணம் செய்த 8 பேரில், பெங்களூரைச் சேர்ந்த சோனியா (33) உயிரிழந்தார். மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படகு உரிமையாளா் சதீஷ் (39) வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், ஓட்டுநர் தங்கமணி (45) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். சுற்றுலாப் பயணிகளை அரசு அனுமதியின்றி படகில் ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.